×

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ராம்நாத் கோவிந்த்: 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது

டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ராணுவ அணிவகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை விட அரை மணி நேரம் தாமாதமாக காலை 10.30 மணிக்கு குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பு, விஜய் சவுக் பகுதியில் இருந்து தொடங்கி ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை அடையும். விழாவில், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதக்கங்களை வழங்குவார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் வருகை இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 1.25 லட்சம் பார்வையாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவர். இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 9 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது….

The post டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ராம்நாத் கோவிந்த்: 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Ramnath Govind ,Delhi ,73rd Republic Day ,Corona ,Dinakaraan ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!